அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய எம்எல்ஏ

ஊட்டமலை அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பெண்ணாகரம் எம்எல்ஏ
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை கிராமத்தில் அமைந்துள்ள அரசு துவக்கப்பள்ளியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஜிகே. மணி நேற்று களஆய்வு மேற்கொண்டார். அப்போது துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பெற்றோர்கள் சொற்படி நடக்க வேண்டும் சரியான இலக்குகளை நிர்ணயம் செய்து சிறு வயது முதல் அதற்காக நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story