போச்சம்பள்ளி பகுதிகளில் மழையால் அழுகி வரும் முள்ளங்கி விவசாயிகள் வேதனை.
Krishnagiri King 24x7 |24 Dec 2024 2:17 AM GMT
போச்சம்பள்ளி பகுதிகளில் மழையால் அழுகி வரும் முள்ளங்கி விவசாயிகள் வேதனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஜம்புகுட்டபட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். 45 நாட்களில் சாகுபடி செய்யப்படும் முள்ளங்கி விளைச்சலுக்கு வருகிறது. இந்த நிலையில் போச்சம்பள்ளி பகுதியில் விளையும் முள்ளங்கிகள், உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் போச்சம்பள்ளி பகுதிகளில் பெய்த மழையால் உள்ளங்கைகள் அழுகி வருகின்றன. மீதமுள்ள முள்ளங்கையை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றால் அங்கு வியாபாரிகள் முள்ளங்கியை வாங்க மறுக்கின்றன இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
Next Story