தாளவாடி அருகே வனக்காப்பாளர் தற்கொலை

தாளவாடி அருகே வனக்காப்பாளர் தற்கொலை
X
தாளவாடி அருகே வனக்காப்பாளர் தற்கொலை
தாளவாடி அருகே வனக்காப்பாளர் தற்கொலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 33). இவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சர கத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் குடும்பத்துடன் அங்குள்ள அரசு குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிச்சுமை காரணமாக மாதேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனக்காப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வன ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Next Story