வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தி.மு.க.அரசு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி யும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்சண்முகவேல்சாமிமுன்னிலை வகித்தார்.பா.ம.க மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமாகண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது வன்னியர்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்காத ஆளும் திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
Next Story



