ஆரணியில் பெரியார் நினைவு தினம்
பெரியார் நினைவு தினம் முன்னிட்டு ஆரணியில் அனைத்து கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனுசரித்தனர். திமுக. ஆரணியில் பெரியார் நினைவு தினம் முன்னிட்டு திமுக சார்பில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைசெயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், துரைமாமது, மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், நிர்வாகிகள் பாலமுருகன், பொன் சேட்டு, வழக்கறிஞர் கார்த்தி, மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக. அதிமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கோவிந்தராசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட பேரவை செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் க.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், திருமால், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தை: விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முத்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரன், நகரசெயலாளர் மோ.ரமேஷ், நகரதுணைசெயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story




