விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒரு நாள் காளான் தொழில்நுட்ப பயிற்சி

X
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் ஜெயகுமார் கலந்துகொண்டு காளாண் வகைகள், காளாண் வளர்க்கும் முறை, காளாண் படுக்கை, காளானில் மதிப்பூட்டப்படும் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தார். தொடர்ந்து மதிப்பூட்ட பொருட்களான பிஸ்கட், கட்லட், சூப் போன்ற பொருட்கள் தயாரித்தல், காளாண் வித்துக்கள் உற்பத்தி மற்றும் காளாண் படுக்கைகள் அமைக்கும் முறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் முனைவர் ஜெயக்குமார் செயல்விளக்கப் பயிற்சி அளித்தார். குடில்களில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை வளரும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது இதில் கடலூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Next Story

