தேசிய அளவில் நடைபெற்ற ரோல்பால் விளையாட்டில் வெற்றிபெற்ற இந்திய அணி வீரர் சிவசந்திரனுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் வாழ்த்து

X
தேசிய அளவில் கோவாவில் நடைபெற்ற ரோல்பால் விளையாட்டில் வெற்றிபெற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விளையாட்டு வீரர் சிவச்சந்திரன் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய அளவில் கோவாவில் நடைபெற்ற ரோல்பால் விளையாட்டில் வெற்றிபெற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விளையாட்டு வீரர் சிவச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களை நேற்று (23.12.2024) சந்தித்து வாழ்த்துப் பெற்றார். நான்காவது ஆசிய அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி கோவா மாநிலம், மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் கடந்த டிசம்பர் 16 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் தேர்வான 12 நபர்களில் கடலூர் மாவட்டம். கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் ஒருவராக பங்கேற்றார். இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் பட்டம் பயின்று வருகிறார். தேசிய அளவில் ரோல்பால் பெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் பங்கேற்பதற்காக உறுப்பினருக்கு ரூ.1 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டு. நுழைவுக் கட்டணமாக .40,000 தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலிருந்து விளையாட்டிற்காக 9 வீரர்கள் தேர்வுபெற்றனர். இந்திய அளவில் 60 நபர்கள் தேர்வுபெற்றிருந்தனர். இறுதியகாக 12 வீரர்கள் கொண்ட அணியின் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அதற்காக நுழைவுக் கட்டணமாக ரூ.40,000 செலுத்துவதற்கு நிதியுதவி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரினார். அதனடிப்படையில் உதவிபுரியும் வகையில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் வாயிலாக ரூ.40,000 வழங்கப்பட்டது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி ஈரான் அணியை வென்று தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) தீபா விளையாட்டு பயிற்சியாளர் எம்.விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

