பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் உணவு உண்டு உறங்கி என கோஷம் போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் உணவு உண்டு உறங்கி என கோஷம் போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் உணவு உண்டு உறங்கி என கோஷம் போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக ஆண் பெண் என 55 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 380 ரூ ஊதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து ஊதிய உயர்வு கேட்டு உள்ளாட்சித் துறை ஆணையரிடம் மனு அளித்த நிலையில் நாள் ஒன்றுக்கு 410 ரூ ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து கடந்த மாதத்திலிருந்து நாள் ஒன்றுக்கு பழைய ஊதிய தொகையை விட ஐந்து ரூபாய் குறைத்து 375 வழங்கப்பட்டுள்ளது.இதனை கண்டித்தும். அரசு அறிவித்ததன் படி தீபாவளிக்கு வழங்க வேண்டிய போனஸ் ரூபாய் ஆயிரம் வழங்க கோரியும். மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணை 545 ,585,610 ன் படி ஊதிய தொகையினை வழங்க வேண்டும். பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் இதர தொழிற்சங்கங்களில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசு அதிகாரிகளையும் பேரூராட்சி நிர்வாகிகளை கண்டித்தும். சேத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்டு உறங்கி அவர்களது கோரிக்கைகளை கோஷம் போட்டவாறு முற்றுகை போராட்டத்தில் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்ட குழு தலைவர் சிஐடியு ஊரக உள்ளாட்சித் துறை அமைப்பின் மாநில தலைவர் பாலசுப்ரமணியன் மாவட்டத் தலைவர் திருமலை ஆகியோரை அழைத்து பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக தீபாவளி போனஸ் ரூபாய் ஆயிரம் உடனடியாக வழங்கப்படும் எனவும் . புதிய ஊதியம் ரூபாய் 410 வழங்குவது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை விட்டு பணிக்கு திரும்பினர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு உண்டு உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story