வெள்ளகோவிலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி

வெள்ளகோவிலில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெள்ளகோவிலில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சொந்த ஊரான மேட்டுப்பாளையத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தபட்டது. வெள்ளகோவில் வேலாயுதசாமி வணிக வளாகம், கடைவீதி, கரூர் சாலை, பாப்பம்பாளையம், காமராஜபுரம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், செரியன்கிணத்துப்பாளையம், காமராஜபுரம் கான்வென்ட், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துரை ராமசாமி உருவப்படங்கள் வைக்கப்பட்டு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தின.ர் வேலாயுதசாமி வணிக வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் வெங்கடேச சுதர்சன் தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் விஸ்வேஸ்வரன் சம்யுக்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகரச் செயலாளர் டீலக்ஸ் மணி, முன்னாள் நகராட்சி தலைவர் கந்தசாமி, வேலம்பாளையம் ஊராட்சி தலைவர் முருகவேல்@ராமலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராஜலிங்கம்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அருண்குமார், மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கண்ணுச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகர மன்ற உறுப்பினர் ராம்குமார், நகர அவை தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story