அரியலூரில் தவெக நிர்வாகிகள் இருவருக்கு கத்திக் குத்து

X
அரியலூர், டிச.24- அரியலூரில் தவெக நிர்வாகிகள் இருவரை கத்தியால் குத்திய இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் அடுத்த மறவனூர், நடுத் தெருவைச் சேர்ந்த சசிகுமார் மகன் சதீஷ்குமார்(24), மலர்மன்னன் மகன் சிவகுமார்(25). தமிழக வெற்றிக் கழக கிளை நிர்வாகிகளான இவர்கள், செவ்வாய்க்கிழமை நிர்வாகிகளுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, காமராஜர் ஒற்றுமைத் திடல் அருகேயுள்ள ஒரு கைப்பேசிகள் விற்பனை கடை முன்பு அமர்ந்திருந்தனர்.அப்போது அங்கு வந்த, திம்மூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், தான் கொண்டு வந்த கத்தியால் சதீஷ்குமார் கழுத்து மற்றும் வாய்பகுதியில் குத்தியுள்ளார். இதை தடுத்த சிவகுமார் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்துச் சென்ற காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில், சதீஷ்குமார், தினேஷ்குமார் மனைவியிடம் தொடர்பில் இருந்ததும், இதனை தினேஷ்குமார் கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த தினேஷ்குமார் மேற்கண்ட சதீஷ்குமாரை கத்தியால் குத்தியதும், தடுக்க வந்த சிவகுமாரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
Next Story

