அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு
Ariyalur King 24x7 |24 Dec 2024 12:02 PM GMT
சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது குடியரசு தலைவருக்கு மனு அனுப்ப மாவட்ட கலெக்டர் இடம் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர், டிச.24- அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித் ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்திமனு அளித்த அந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர். அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அரியலூர் நகரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து பேரணியாக சென்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னசாமியிடம் இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி விடக் கோரி கடிதம் வழங்கப்பட்டது இதில் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story