கோவை: மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி !
Coimbatore King 24x7 |24 Dec 2024 12:07 PM GMT
மருதமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி பலி.
கோவை அருகே உள்ள பீடம்பள்ளி தாயம்மாள் நகரைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 21) மற்றும் சவுரிபாளையம், பால தண்டாயுதபாணி நகரைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜோய் (23) இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவை-மருதமலை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story