நெல் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்
Kanchipuram King 24x7 |24 Dec 2024 12:46 PM GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்மரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், மருதம், பெருநகர், சாலவாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 300 ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவ நெற்பயிர் நடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்தன.கடந்த பெஞ்சல் புயலால் பெய்த மழையால், விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் பெய்து வந்ததால், நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, விளைநிலங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து, நெல் அறுவடை செய்ய ஏதுவாக உள்ளன. இந்நிலையில், நேற்றுமுதல் விவசாயிகள் அறுவடை மிஷின் வாயிலாக, நெல் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுக்குறித்து விவசாயிகள் கூறியதாவது : பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால், விளை நிலங்களில் மழைநீர் தேங்கி வந்தது. இதனால், குறித்த நேரத்திற்கு நெற்பயிர் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, மழைநீர் வடிந்து உள்ளதால், நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு, விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story