உடற்பயிற்சி கூடம் சீரமைக்க களக்காட்டூரில் எதிர்பார்ப்பு
Kanchipuram King 24x7 |24 Dec 2024 1:02 PM GMT
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள், பயன்பாடின்றி வீணாகி வருகிறது
காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூர் ஊராட்சி குருவிமலையில், கடந்த 2018ம் ஆண்டு, 30 லட்சம் ரூபாய் செலவில் அம்மா விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது.இதில், திறந்தவெளி மற்றும் உள்ளரங்க உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. களக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள ‛பிட்னஸ்' உபகரணங்கள் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள், பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, உடற்பயிற்சி உபகரணங்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story