காஞ்சிபுரத்தில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்

காஞ்சிபுரத்தில்  ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், ஸ்ரீஸ்ரீதாராம பஜனை மண்டலி சார்பில், 32வது ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள கொல்லாசத்திரத்தில், ஸ்ரீஸ்ரீதாராம பஜனை மண்டலி சார்பில், 32வது ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நேற்று நடந்தது.உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குருகீர்த்தனை உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 9:00 மணிக்கு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு கீர்த்தனைகள் நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story