எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து அஞ்சலி
Dindigul King 24x7 |24 Dec 2024 1:07 PM GMT
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக நிறுவனமான டாக்டர் எம்ஜிஆரின் 37 ஆவது நினைவு தினம் இன்று 24.12.2024 அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் தொடங்கி பெரியார் சிலை காமராஜர் சிலை வழியாக பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பேரணி யாக வந்தனர். அஇஅதிமுக அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமையில் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் செயலாளர் பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம் குமார் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story