இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Dindigul King 24x7 |24 Dec 2024 1:31 PM GMT
தனியாருக்கு சொந்தமான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜி நகரில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையால் ஏராளமான தண்ணீர் உறிஞ்சப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இதனை அடுத்து இந்து மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. உத்தரவு நகல் கிடைத்தும் இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து திங்கள் கிழமை மதியம் ஒரு மணி அளவில் வேடசந்தூர் இந்து மக்கள் கட்சியின் சார்பில் செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர் நாகராஜ், முழு நேர ஊழியர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜா, நிர்வாகிகள் கார்த்தி, இந்து மகா சபா மாநிலச் செயலாளர் சரவண பாண்டி, தென்மண்டல தலைவர் ஜகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story