விருத்தாசலம் அருகே அமைச்சரை வழிமறித்து பஸ் இயக்க கோரிக்கை வைத்த பள்ளி மாணவிகள்

விருத்தாசலம் அருகே அமைச்சரை வழிமறித்து பஸ் இயக்க கோரிக்கை வைத்த பள்ளி மாணவிகள்
X
வியாழக்கிழமை முதல் பஸ் இயக்கப்படும் என அமைச்சர் சிவி கணேசன் உறுதி
விருத்தாசலம், டிச.25- கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தில் கடந்த 22ஆம் தேதி அப்பகுதியில் குளிக்க சென்ற 10 வயது சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த சிறுவனை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி வி கணேசன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி உடனடியாக சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் சி.வி கணேசனை அப்பகுதி வழியாக வந்த பள்ளி மாணவ மாணவிகள் வழிமறித்து தங்கள் கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. ஆற்றில் ஆபத்தான முறையில் கடந்து சென்று 2 கிலோமீட்டர் நடந்தே சென்று பஸ் பிடித்து பெண்ணாடம் விருத்தாசலம் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகிறோம். அதனால் எங்கள் கிராமத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வகையில் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடன் அமைச்சர் சி வி கணேசன் போக்குவரத்து துறை மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிளிமங்கலம் வரை இயக்கப்படும் பஸ்சினை மோசட்டை கிராமம் வரை நீட்டித்து இயக்க உத்தரவிட்டார். நாளை வியாழக்கிழமையில் இருந்து பஸ் இயக்கப்படும் என மாணவிகளிடம் உறுதியளித்த அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். திடீரென அமைச்சரை வழிமறித்து அமைச்சரிடம் பள்ளி மாணவிகள் கோரிக்கை வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story