ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முகப்பில் இடம்பெறும் தமிழக பழமொழி
Chengalpattu King 24x7 |24 Dec 2024 3:22 PM GMT
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முகப்பில் இடம்பெறும் தமிழக பழமொழி
சர்வதேச பயணியர் அதிகமானோர் வருகை தரும் மாமல்லபுரத்தில், பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள் சிறப்புடையவை. சர்வதேச பயணியரை பொறுத்தவரை, தமிழரின் பாரம்பரியம், கலாசாரம், வாழ்வியல் நடைமுறை உள்ளிட்ட விபரங்களை, சுற்றுலா வழிகாட்டிகள் வாயிலாக கேட்டு வியப்பர். இச்சூழலில், அர்ஜுனன் தபசு சிற்பம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முகப்பில் இடம்பெறும் கருத்துக்களை வாசித்தும் வியக்கின்றனர். பள்ளி நிர்வாகம் நுழைவாயில் முகப்பில் பழமொழி, பிற கருப்பொருள் வாசகங்கள் ஆகியவற்றை, தமிழ் மொழியில் எழுதி, அதை விளக்கும் வகையில் படம் வரைந்து குறிப்பிடுகிறது. அதில், ஆங்கில விளக்கமும் இடம்பெறுகிறது. அர்ஜுனன் தபசு சிற்பம் காண, பள்ளி பகுதியைக் கடந்து செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், பழமொழி உள்ளிட்டவற்றை வாசித்து, தமிழர்களின் மரபு குறித்து வியக்கின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Next Story