அமமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு..
Rasipuram King 24x7 |24 Dec 2024 3:28 PM GMT
அமமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி. தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் தமிழகத்தின் விடிவெள்ளி எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம் தலைமையில் ராசிபுரம் நகரக் கழகச் செயலாளர்கள் ஆர்.டி. தர்மராஜ், மற்றும் பூபதி அவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ. பி.பழனிவேல், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலர் தூவி அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஈ.க. திலகம், ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் ராஜா, ராசிபுரம் நகர கழக நிர்வாகிகள் தியாகராஜன், சண்முகம் ,செல்வம், வெற்றிச்செல்வன், கோவிந்தசாமி, மாதேஸ்வரன், பழனிச்சாமி, அய்யனார், விவசாய அணி துரைசாமி , சண்முகம், செந்தில், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் முருகேசன், நடராஜன்,மேலும் ராசிபுரம் பொதுக்குழு உறுப்பினர் டீ. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
Next Story