அதிமுக சார்பில் ராசிபுரத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு..

அதிமுக சார்பில் ராசிபுரத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு..
அதிமுக சார்பில் ராசிபுரத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு..
அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுக ராசிபுரம் நகரக் கழகத்தின் சார்பில் நகரக் கழக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி கழக நிர்வாகிகள், தொண்டர்கள், அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றி மலர் தூவி அவரது 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை நிர்வாகிகள் அனுசரித்தனர். இதே போல் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு நகர கழக செயலாளர் எம். பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story