லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு

லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு
சிலுவத்தூர் சாலை காட்டுமடம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி விஜயலெட்சுமி(60 வயது). கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 23ஆயிரம், விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் திருடு போய் இருந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை என்ற பேரில் எங்களை அலைக்கழித்தனர். அதோடு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனம், அரசு ஜீப், இன்ஸ்பெக்டரின் காருக்கு பணம் தராமல் பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றனர். மேலும் குற்றவாளிகளை தேடி செல்வதாக வாகன ஏற்பாடு செய்வதற்கு பணம் வாங்கினர். இந்தநிலையில் எங்கள் வீட்டில் திருடிய நபரை கைது செய்ததை அறிந்து காவல் நிலையம் சென்று கேட்டோம். அப்போது 25 பவுன் நகைகள் மட்டும் தான் தரமுடியும் என்றும், மீதமுள்ள நகைகள் கவரிங் நகைகள் என்று கூறிவிட்டனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பெரும் தொகையை லஞ்சமாக தர வேண்டும் என திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவலர் வினோத் மூலம் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் கருப்பையாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றவாளியை போலீஸ் கைது செய்த தகவல் அறிந்து கருப்பையா, காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது 25 சவரன் நகைகள் மட்டும் திரும்ப கொடுத்துள்ளனர். மீதி நகை, பணம், கைகடிகாரத்திற்கு சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது
Next Story