இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள புனித இருதய ஆண்டவர் பேராலயத்தில் நள்ளிரவு கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு
தர்மபுரி நகராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த மற்றும் மாவட்டத்தின் தலைமை தேவாலயமான் புனித இருதய ஆண்டவர் தேவாலயத்தில், நேற்று டிசம்பர் 24, நள்ளிரவு 11.30 மணிக்கு கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு நடைபெற்றது இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அருட்தந்தையர்கள் இயேசுவின் பிறப்பு அனைவருடன் அன்புடன் பகிர்ந்து வாழ்தல் என்பதே என்று கிறிஸ்மஸ் செய்தி அறிவித்தனர். திருப்பலி முடிவில் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் பின்பு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
Next Story