அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழா தேரோட்டம்
Sankarankoil King 24x7 |25 Dec 2024 1:09 AM GMT
ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழா தேரோட்டம்
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் மகோற்சவ விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 20ஆம் தேதிவரை உற்சவ பலி பூஜை, 21, 22, 23ஆம் நாள்களில் கருப்பன் துள்ளல் நடைபெற்றது. இந்நிலையில் தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் தேரில் எழுந்தருளினாா். கோயில் உதவி ஆணையா் உன்னிகிருஷ்ணன்பிள்ளை தங்க வாளுடன் வலம் வந்தாா். தோ்வலத்தின்போது கருப்பன் துள்ளல் நடைபெற்றது.
Next Story