சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தபாலில் பெறும் வசதி
Sankarankoil King 24x7 |25 Dec 2024 1:13 AM GMT
ஐயப்பன் கோயில் பிரசாதம் தபாலில் பெறும் வசதி
சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் பிரசாதத்தை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில்பட்டி அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ் குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் பிரசாதத்தை பக்தா்களின் வீட்டிற்கே கொண்டு சோ்க்கும் வசதியை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது. ஒரு பாக்கெட் அரவணை பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அா்ச்சனை பிரசாதம் ஆகிய பொருள்கள் அடங்கிய பிரசாத பையின் விலை ரூ.520. இதில் 4 பாக்கெட் அரவணை பாயாசம் கொண்ட பிரசாத பை ரூ.960-க்கும், 10 பாக்கெட் அரவணை பாயாசம் கொண்ட பிரசாத பை ரூ. 1760- க்கும் கிடைக்கும். பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகே உள்ள தலைமை அஞ்சலகம் அல்லது துணை அஞ்சலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால்காரா் மூலம் சபரிமலை ஐயப்பன் கோயில் அருள்பிரசாதம் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும் என்றார்.
Next Story