தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
Thoothukudi King 24x7 |25 Dec 2024 2:15 AM GMT
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மையம் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மையம் சார்பில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. விழாவில் எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர், மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் & உறுப்பினர் சங்கர் வரவேற்புரை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலர் கே.உஷா தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பி.முத்துராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நுகர்வோர் உரிமை பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். விழாவில் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கலந்து காெண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் எஸ்.மாரியப்பன் கருத்துரை வழங்கினார். தூத்துக்குடி பிபிசிஎல் (எல்பிஜி), மண்டல மேலாளர் ஏ.பிரபாகர் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக அரசு பாலிடெக்னிக் கல்லூரி, என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஜி.ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.
Next Story