கிறிஸ்மஸ் விழா கண் கவரும் வாகன ஊர்வலம் இளைஞர்கள் உற்சாகம்
Thoothukudi King 24x7 |25 Dec 2024 2:31 AM GMT
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பல்வேறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு உற்சாக நடனமாடி கிறிஸ்து பிறப்பை வரவேற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிப்பு
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாகும் இங்கு பாலன் பிறக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையை தூத்துக்குடி மாநகரில் ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் பிரேசில், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது போன்று அலங்கார ஊர்திகளில் பல்வேறு வடிவங்களில் உருவங்களை அமைத்து உற்சாக நடனமாடியபடி இளைஞர்கள் கொண்டாடுவது வழக்கமாகும். இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களிப்பார்கள் இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மிகப் பிரமாண்டமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகரில் லயன் ஸ்டவுன், மரக்குடி, மட்டக்கடை, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கப்பல், ஹெலிகாப்டர், ரோபோ, பச்சை மனிதன், மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா உள்ளிட்ட வாகனங்களில் கண்ணை கவரும் வகையில் மின் விளக்குகள் எரியவிட்டு இன்னிசை ஒலிக்க இளைஞர்கள் ஆட்டம் பாடத்துடன் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பனிமய மாதா பேராலயம் வந்தடைந்தது. இதை பல்வேறு பகுதிகளில் நின்று லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்த ஊர்திகள் ஊர்வலததை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், நகர உதவி கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story