கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்
Nilgiris King 24x7 |25 Dec 2024 3:02 AM GMT
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு உதகையில் உள்ள தேவாலங்களில் இரவு நேர சிறப்பு திருப்பலி நடைப்பெற்றது. உலகில் அமைதி வேண்டியும், பேரழிவுகளில் இருந்து மக்களை பாதிக்கப்பட்ட சிறப்பு பிரார்த்தனை. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். கிறிஸ்த்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகை கிறிஸ்த்துமஸ். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்த்து பிறப்பை வெகுவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் உலகை மீட்க வந்த ரட்சகர் இயேசு கிறுஸ்த்து பிறக்கபோகிறார் என்ற மகிழ்ச்சியான நற்செய்தியை இரவு 12 மணிக்கு திருப்பிலி நிறைவேற்றி கிறிஸ்தவர்ள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் பேராலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்குதந்தை இம்மானுவேல் ஆகியோர் முன்னிலையில் இரவு நேர சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்த திருப்பிலியில் உலகில் அமைதி வேண்டியும், பேரழிவுகளில் இருந்து மக்களை பாதிக்கப்பட்ட சிறப்பு பிரார்த்தனை மேற்க்கொள்ளப்பட்டது.குறிப்பாக உதகையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் இரவு நேர திருப்பலி நடைபெற்றது. உதகையில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவர்கள் இந்த திருப்பலியில் பங்கு கொண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பை அறிவிக்க தத்துரூபமாக குடில்கள் மூலம் அமைத்திருந்தனர். இந்த திருப்பதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கு கொண்டனர். அனைத்து தேவாலயங்ளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.
Next Story