ஓய்வூதியர் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

ஓய்வூதியர் குறைதீர்ப்பு நாள் கூட்டம்
கூட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஓய்வு பெற்றவர்களின் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். சென்னை ஓய்வூதிய இயக்குநர் அலுவலக கணக்கு அலுவலர் அருள் முன்னிலை வகித்தார். அரசுதுறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதார்களிடமிருந்து மருத்துவ சிகிச்சை தொடர்பாக 4 மனு, ஊதிய மறுநிர்ணயம் தொடர்பாக 3 மனு, ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கக் கோரி 4 மனு, ஜி.பி.எப்., தொடர்பாக 1 மனு, குடும்ப ஓய்வூதிய கோரி 1 மனு, இ.பி.எப்., கோரி 1 மனு என மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.மேலும் மாவட்ட கருவூலம் தொடர்பாக 7 மனு, வட்டார கல்வி அலுவலகம் தொடர்பாக 2 மனு, சங்கராபுரம் பி.டி.ஓ., அலுவலகம் தொடர்பாக 1 மனு, விழுப்புரம் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தொடர்பாக 1 மனு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலான் இயக்குநர் தொடர்பாக 1 மனு என மெத்தம் 12 மனுக்கள் ஓய்வூதியதார்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.
Next Story