மது பாட்டில்கள் கள்ள சந்தையில் விற்பதால் பொதுமக்கள் அவதி
Dindigul King 24x7 |25 Dec 2024 4:04 AM GMT
கொடைக்கானல் கீழ் மலை கிராமமான செம்பராங் குளம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மது பாட்டில்கள் கள்ள சந்தையில் விற்பதால் பொதுமக்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செம்பரான் குளம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக நடத்தி வரும் மது கடையை அகற்றுவதற்காக அப்பகுதியில் உள்ள பெண்கள் கொடைக்கானல் காவல்துறையினரிடம் புகார் அளிப்பதற்கு வந்துள்ளனர். செம்பராங் குளம் கிராமத்தை சுற்றி பார்ச்சலூர் பன்றிமலை ஆடலூர் வட கவுஞ்சி கருவள்ளப்பட்டி போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது இப்பகுதியில் அதிகளவு பழங்குடியினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு தினகூலி வேலை ஒன்று மட்டுமே வாழ்வாதாரமாக இருந்து வருவதாக கூறினர் இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஆண்கள் தினந்தோறும் குடித்துவிட்டு பெண்களிடம் சண்டே இடுவது சாலையில் செல்லும் பெண்களை கேளிக்கை போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. பெண்கள் வேதனையுடன் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது தங்களது குடும்பத்தின் நிம்மதியும் சந்தோசமும் கள்ள சந்தையில் விற்கப்படும் மது பாட்டில்களால் கெட்ட சீரழிகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியை கடக்கும் பொழுது ஆண்கள் குடித்துவிட்டு தகாத வார்த்தை பேசுவதும் குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் கூறி வருகின்றனர். பகுதியில் நடக்கும் இது போன்ற சமூக விரோத செயல்களை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து தருமாறு அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story