அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
கொரட்டூர் இளங்கோ நகர் பார்க் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று கொரட்டூர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, பார்சலுடன் வந்த ஒரு வாலிபரை பிடித்து, சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலம் சுமண்டல் பகுதியை கோரங்கா டோரா (40) என்பதும், ஒடிசாவில் இருந்து ரயில் வழியாக கடத்தி வரப்படும் கஞ்சாவை திருவள்ளூரில் உள்ள ஒரு அடையாளம் தெரியாத நபரிடம் வாங்கி வந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் கொரட்டூர், பட்டரவாக்கம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு விற்க முயன்றதும் தெரிந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story