திருச்சி மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
Tiruchirappalli King 24x7 |25 Dec 2024 4:25 AM GMT
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதுரெட்டித் தெரு, பொன்விழா நகா், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வாா்னா்ஸ் சாலை, அண்ணா நகா், குத்பிஷா நகா், உழவா்சந்தை, ஜெனரல் பஜாா், கீழச்சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை, புத்தூா், அருணா திரையரங்கம், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா திரையரங்கம், நீதிமன்ற வளாகம், அரசு பொதுமருத்துவமனை, பீமநகா், செடல் மாரியம்மன் கோயில், கூனி பஜாா், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூா் சாலை, பாரதி நகா் ஆகிய இடங்களில் வரும் வியாழக்கிழமை (டிச. 26) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
Next Story