சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயா, பொருளாளர் சந்திராமேரி, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியம்மாள், அலுவலக உதவியாளர் அந்தோணியம்மாள் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிதுரை சிறப்புரையாற்றினர்.இதில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும். அரசாணை 95 உடனடியாக ரத்து செய்து கால முறை ஊதியத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையலர் உதவியாளர்களை பணி நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஷாலினி நன்றி கூறினார்.
Next Story