திருச்சி புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை
Tiruchirappalli King 24x7 |25 Dec 2024 4:30 AM GMT
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.26) மின் விநியோகம் இருக்காது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (டிச.26) மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்பந்தல், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னக்கரை, நாமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாத்தலை, வி.மணியம்பட்டி, துடையூா், தீராம்பாளையம், திருப்பைஞ்ஞீலி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி. புதுப்பட்டி, பழம்புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Next Story