மத்திய அமைச்சரை கண்டித்து போராட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து போராட்டம்
போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் புகழ் குறித்த பேரணி நடத்தப்பட்டு, கச்சேரி சாலையில் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடந்தது. காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இளவரசன், ஜெயசந்திரன், இளையராஜா, இதயதுல்லா, வட்டார தலைவர் அசோக், மகிளா காங்., நிர்வாகிகள் ராஜேஸ்வரி, மதுராதேவி, இந்திரா, பவானி, சிறுபான்மை பிரிவு காஜா மொய்தீன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். பேராட்டத்தில் நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திய பேசிய பா.ஜ., மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி போராட்டம் செய்தனர். இதில் சார்பு அணி நிர்வாகிகள் கலியமூர்த்தி, பெரியசாமி, ரகோத்தமன், சுகுமார், ராஜி, வட்டார தலைவர்கள் அப்துல்கலாம், கிருபானந்தன், செல்வராஜ், மாயஜோதி, அஞ்சல, சிக்கந்தர், கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Next Story