கிட்டங்கி பராமரித்தல் விழிப்புணர்வு பயிற்சி

கிட்டங்கி பராமரித்தல் விழிப்புணர்வு பயிற்சி
பயிற்சி
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், புதுடெல்லி சேமிப்பு கிடங்கு மேம்பாடு ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து கிட்டங்கி பராமரிப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கி, பயிற்சியினை துவக்கி வைத்தார். துணைப்பதிவாளர் சுகுந்தலதா முன்னிலை வகித்தார். வங்கி செயலாட்சியர் சவிதாராஜ் நடேசன் வரவேற்றார். இதில், எதிர்கால உணவு தேவை மற்றும் விதை தேவைகள் குறித்தும், அறிவியல் பூர்வமாக அவற்றை சேமித்தல், நுண்ணுயிர்கள், எலிகள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து தானியங்களை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.
Next Story