டிஐஜி ஆய்வு
Erode King 24x7 |25 Dec 2024 5:06 AM GMT
ஈரோடு எஸ்பி அலுவலக அமைச்சுப்பணிகள் குறித்து கோவை சரக டிஐஜி ஆய்வு
ஈரோடு மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீஸ் ஸ்டேஷன், போலீசாருக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், ஆயுதங்கள், உபகரணங்கள், சட்டம் ஒழுங்கு நடவடிக்கை, நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஆண்டு தோறும் கோவை சரக டிஐஜி ஆய்வு மேற்கொள்வார். இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட குற்றப்பிரிவு, கோபி மதுவிலக்கு பிரிவு, ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி சரவணசுந்தர் ஆய்வு மேற்கொண்டார். இதன்தொடர்ச்சியாக நேற்று ஈரோடு எஸ்பி அலுவலக அமைச்சுப்பணிகள் தொடர்பாக டிஐஜி சரவணசுந்தர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக கோப்புகளின் நிலை குறித்தும் பார்வையிட்டு, அலுவலர்களிடம் கலந்துரையாடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இரண்டு மணி நேர ஆய்வுக்கு பின் ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்கு டிஐஜி சரவணசுந்தர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் போலீசாரின் வாகனங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஈரோடு எஸ்பி ஜவகர், ஏடிஎஸ்பி.க்கள், டிஎஸ்பி.க்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story