பீர் பாட்டிலால் தாக்கத்தை ஆட்டோ ஓட்டுனரை கொலை முயற்சி

பீர் பாட்டிலால் தாக்கத்தை ஆட்டோ ஓட்டுனரை கொலை முயற்சி
காளையார்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுநர்களுக்குள் தகராறு ஒருவரை பீர் பாட்டிலால் குத்தியதில் படுகாயம் அடைந்துள்ளார்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புள்ளுகோட்டையைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(45). இவர் அப்பகுதியில் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார் அதேபகுதியில் ஆட்டோ ஓட்டும் மற்ற ஓட்டுநர்கள் உடன் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது முத்துக்குமாரை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கியதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார்(45) சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பெயரில் காளையார் கோவில் போலீசார் வசந்த், அருண் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
Next Story