தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்தது ஏன்?: அண்ணாமலை விளக்கம்
Chennai King 24x7 |25 Dec 2024 5:31 AM GMT
தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தும்போது, தேர்தல் நடத்தை விதி பிரிவு 93 (2)-ல் மாற்றம் செய்து வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரித்து பேசுகின்றனர். இதுவரை அப்படி வழங்கப்பட்டதில்லை. இந்த திருத்தம் மூலம் அச்சமின்றி வாக்களிக்க முடியும். மேலும் 5, 8 வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி வழங்கப்படமாட்டாது என்பதற்கு தமிழக அரசு விரோதத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மத்திய அரசை பொருத்தவரை கல்வி தரமாக வழங்கப்பட வேண்டும். என்சிஆர்டி, ஏசர் உள்ளிட்ட தரவுகளின்படி இதர தென்மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியிருக்கிறது. இதில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி உட்பட கொங்கு பகுதியில் இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவினர்தான். நான் இதுவரை வருமானவரித் துறைக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. பெரியாரின் ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. அம்பேத்கரின் கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என திருமாவளவன் போராட்டம் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Next Story