கோவை: குப்பை அள்ளும் வாகன ஓட்டுநர்கள் போராட்டம் !
Coimbatore King 24x7 |25 Dec 2024 5:33 AM GMT
கோவை, மாநகராட்சியில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம்.
கோவை, மாநகராட்சியில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கான ஒரு மாத சம்பளத்தை போனஸ் தொகையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தீபாவளிக்கு முன்பாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேறாத நிலையில் தொடர்ந்து பல்வேறு வகையில் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்த சூழலில், நேற்று ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகன ஓட்டுநர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திற்குள் தொடர் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகைக்காக போனஸ் தொகை கேட்டு பலகட்ட போராட்டங்களில் தாங்கள் ஈடுபட்டும் மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனவும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தங்களை நிர்வாகம் எந்த விதத்திலும் கண்டு கொள்வதில்லை எனவும் கூறிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர். குப்பை அள்ளும் வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து வாகனங்கள் மாநகராட்சி அலுவலர்களை கொண்டு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story