கிறிஸ்துமஸ் விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கினர்

கிறிஸ்துமஸ் விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தார்*
சிறுபான்மை சமுதாயத்தினருக்கு காப்பாளராக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் தான் - அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேச்சு கிறிஸ்துமஸ் விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தார்
இயேசு கிருஸ்துவின் பிறப்பை உலகம் முழுவதும் கிருஸ்துவர்கள் கிருஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடிவருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாலயங்களில் கிருஸ்துமஸ் பண்டிகை விழா சிறப்பு ஆராதனைகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி தாவீது நகரில் பெனியேல் திருச்சபையில் கிருஸ்துமஸ் விழா மாவட்ட செயலாளர் பாஸ்டர் ஜோசுவா கண்ணன் தலைமையில் நடைபெற்றது. திருச்சபையில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். பெந்தகோஸ்தே மாவட்ட கெளரவ தலைவர் ஜேக்கப் ஜெம்பு லிங்கம் அமைச்சரை சால்வை அணிவித்து வரவேற்றார்.‌ பின்னர் தனது மனைவியுடன் கிருஸ்துமஸ் கேக் வெட்டிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் குழந்தைகளுக்கு வழங்கி கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது நாட்டு மக்கள் நலனுக்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலனுக்காவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்த கிருஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கிருஸ்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு காப்பாளராக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் தான். சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் உங்களுக்கு முன்னாள் நின்று போராடக் கூடியவர்களாக நாங்கள் இருப்போம். கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்தார்.
Next Story