சாலையில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை !
Coimbatore King 24x7 |25 Dec 2024 6:48 AM GMT
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியாறு - வால்பாறை ரோட்டில், ஒற்றை யானை அடிக்கடி வலம் வருவதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியாறு - வால்பாறை ரோட்டில், ஒற்றை யானை அடிக்கடி வலம் வருவதால் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைகின்றனர்.சின்னாறுபதி, ஆழியாறு, கவியருவி பகுதிகளில் ஜாலியாக நடந்து, சில மணி நேரம் கழித்து வனப்பகுதிக்குள் செல்லும் இந்த யானை, கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் சுற்றி வருகிறது. ஆழியாறு அணைக்கு சென்று தண்ணீர் குடித்து மீண்டும் வனப்பகுதிக்கு செல்லும் இந்த யானை இதுவரை யாரையும் தொந்தரவு செய்யவில்லை என்றாலும், அதன் நடமாட்டம் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.வனச்சரகர் ஞானபாலமுருகன் நேற்று கூறுகையில்,வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்புகாவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு, யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள், யானையை கண்டால் சப்தம் போடுவது, விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கவனமாக செல்ல வேண்டும் என்றார்.
Next Story