ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து!
Ranipet King 24x7 |25 Dec 2024 6:55 AM GMT
இருசக்கர வாகனம் மீது கார் மோதி சப் இன்ஸ்பெக்டர் பலி
வேலூர் மாவட்டம் மோத்தக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் (வயது 52). ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். ஆற்காடு காவலர் குடியிருப்பு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வாழைப் பந்தலில் இருந்து ஆற்காட்டில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு ஸ்கூட்டரில் வந்துள்ளார். ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் பலராமன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் , பலராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்த தகவலின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலராமன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story