மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா்!

X
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவா்கள் ஒரு விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக கடந்த 21-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனா். அவா்கள், ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் ராக்கெட் லாஞ்சரின் பாகம் சிக்கியது. மீனவா்கள் அதை படகில் ஏற்றி திங்கள்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து மீன்பிடி துறைமுக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story

