கர்பப்பை வாய் புற்றுநோய் -க்கு இலவச தடுப்பூசி முகாம் துவக்கம்

முகாம்
சமீபகாலமாக கர்பப்பை வாய் புற்றுநோயால் ஏறாளமான பெண்கள் பாதிக்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல், இறப்பு சதவீதமும் உயர்ந்து வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்தும் நோக்கோடு ரோட்டரி கிளப் தேனி ஸ்டார்ஸ் மற்றும் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து கர்பப்பை வாய் புற்றுநோய் -க்கு இலவச தடுப்பூசி முகாமை துவங்கினர். இந்த முகாமை சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். முதற்கட்டமாக 100 வளரும் இளம் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கர்பப்பை வாய் புற்றுநோய் குறித்து மருத்துவர் கல்பனா பேசுகையில் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படும் இந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்தி வருவதாகவும். 9 வயது முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் திருமணமாகாத பெண்கள் இந்த தடுப்பூசியை வயதுக்கு ஏற்றவாறு அறு மாதங்களுக்குள் இரண்டு முதல் மூன்று முறை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார்.
Next Story