தா.பழூர் அருகே கல்லாவில் திருடிய போதை ஆசாமியை கடை உரிமையாளரே தேடி திருடனை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

தா.பழூர் அருகே கல்லாவில் திருடிய போதை ஆசாமியை கடை உரிமையாளரே தேடி திருடனை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அரியலூர், டிச.25- ஜெயங்கொண்டம் அருகே கடை கல்லாவில் திருடிய போதை ஆசாமியை கடை உரிமையாளரே தேடி திருடனை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார் அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் புகைப்பட கடை நடத்தி வருபவர் கலையரசன் இவர் கடையில் கதவை அடைத்து விட்டு அருகில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார் இந்நிலையில் போதை ஆசாமி கடை கதவை திறந்து  உரிமையாளரை போல் உள்ளே சென்று கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.  பின்னர் கடைக்கு வந்த கலையரசன்  கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்றபோது கல்லாவும் திறந்திருந்தது அதில் சுத்தமாக பணத்தை துடைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது.  பின்னர் அங்கிருந்து சிசிடிவி காட்சியை வைத்து அவரை தேடிச் சென்ற  சுத்தமல்லி பகுதியில் குடிபோதையில் மயங்கி கிடந்தவரும் சிசி டிவி கேமராவில் பதிவானவரும் ஒருவரே என்பது கலையரசனுக்கு தெரிய வந்தது இதனையடுத்து போதை ஆசாமியை காவல்துறையிடம் கலையரசன் ஒப்படைத்தார் போலிசார் விசாரணையில் தத்தனூர் மேலூரைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது தொடர்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story