பட்டுக்கோட்டையில் வெண்மணி தியாகிகள் நினைவேந்தல்
Thanjavur King 24x7 |25 Dec 2024 12:27 PM GMT
நினைவேந்தல்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, மூத்த தலைவர் மெரினா ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் பெஞ்சமின் மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கீழ வெண்மணி புறப்பட்டு சென்றனர்.
Next Story