நாமக்கல்லில், கார் வியாபாரிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.

நாமக்கல்லில், கார் வியாபாரிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.
நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நல சங்கத்தின் 8ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவா ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக மருத்துவர் பாபு ரங்கராஜன் கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல கூட்டமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார், கார் வியாபாரிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், அதற்காக சங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தந்து ஒத்துழைப்பு வழங்கிய நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நல சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வணிகர்களின் நலன் காக்க பேரமைப்பு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார். தொடர்ந்து கார் வியாபாரிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் மயில்வாகனன், பொருளாளர் சின்னுசாமி, மாநில கூடுதல் செயலாளர் தனபால், மாநில முதன்மை துணை தலைவர் காஜா முகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இளைஞரணி மாநகர அமைப்பாளர் அருண்குமார், துணை அமைப்பாளர் சிவக்குமார், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் எவரெஸ்ட் ராஜா, ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி முடிவில் நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நல சங்கத்தின் பொருளாளர் செல்வதுரை நன்றி கூறினார்.
Next Story