தமிழகம் கஞ்சா மாநிலம் அன்புமணி ராமதாஸ் பேட்டி
Nagercoil King 24x7 |25 Dec 2024 1:31 PM GMT
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக தென் மாவட்டங்களில் பல பிரச்சினைகளும் கனிம வள கடத்தலும் அரசியல் பெரும் புள்ளிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அணுகனிக சுரங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் பகுதியில் அமைக்க மத்திய அரசு முயல்கிறது. இதனால் மோசமான சூழல் உருவாகி புற்றுநோய் உட்பட பல பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் தமழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் கேரளாவில் இருந்து பல ஆண்டுகளாக மருத்துவ கழிவுகள், கோழிப்பண்ணை கழிவு, பன்றி கழிவு போன்றவை குமரி, தென்காசி உட்பட தமிழக எல்லை பகுதிகளில் கொட்டி செல்கிறார்கள். எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் எதற்கு . முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் கழிவுகள் விசயத்தில் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பார். கச்சத்தீவு விவகாரத்தில் தி முக., காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் துரோகம் செய்து விட்டார்கள். மோடி அரசு அதை மீட்க முயற்சித்து வருகிறது. இந்தியாவில் அதிக சிறு தொழிலாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எந்த தெருவிலும் கிடைக்கும் சிறு தொழிலாக கஞ்சா விற்பனை நடக்கிறது. தமிழ்நாடு பெயரை கஞ்சா மாநிலமாக பெயர்மாற்றம் செய்யலாம். காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு மோசமான நிலைக்கு சென்று வருகிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய கூறினால் அதில் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பது தவறானது, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பயம். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நான் 3 முறை மோடியிடம் நேரடியாகவும் கடிதம் மூலமும் கேட்டுள்ளேன். முதலமைச்சரை சுற்றி இருப்பவர்கள் வியாபாரிகள் என தெரிவித்தார்.
Next Story