ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பிறந்தநாள் நிர்வாகிகள் வாழ்த்து..
Rasipuram King 24x7 |25 Dec 2024 3:41 PM GMT
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பிறந்தநாள் நிர்வாகிகள் வாழ்த்து..
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களின், 40வது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான மா.மதிவேந்தன் அவர்களின், 40வது பிறந்த நாளை முன்னிட்டு, ராசிபுரம் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் பிறந்த நாள் விழா விமர்சியாக நடைபெற்றது. இதில், கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கேக் வெட்டிக் கொண்டாடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் ராசிபுரம் நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர், மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலச்சந்தர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.பி. ஜெகநாதன், ஆர்.எம்.துரைசாமி, மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story